தமிழ் மக்களின் அளவை முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இவை நீளத்தை அளக்கவும், நெல், அரிசி போன்ற தானிய வகைகளை அளக்கவும், மருந்து வகை, பொன் போன்றவற்றை அளக்கவும், எண்ணெய் நீர் போன்றவற்றை அளக்கவும், நிலம், எடை மற்றும் காலத்தை அளக்கவும் பயன்பட்டது. கணித எண்கள் ==================================== ௧ = 1 = ஒன்று ௨ = 2 ௩ = 3 ௪ = 4 (சதுர், சதுரம் = நான்கு) ௫ = 5 ௬ = 6 ௭ = 7 ௮ = 8 (அஷ்டம் - எட்டு) ௯ = 9 ௰ = 10 = பத்து (தசம் - மலயாலத்தில் ௰ என்பது த ஆகும்) ௰௧ = 11 ௰௨ = 12 ௰௩ = 13 ௰௪ = 14 ௰௫ = 15 ௰௬ = 16 ௰௭ = 17 ௰௮ = 18 ௰௯ = 19 ௨௰ = 20 ௱ = 100 = நூறு ௲ = 1000 = ஆயிரம் ௰௲ = 10000 = பத்தாயிரம் ௱௲ = 100000 = நூறாயிரம் ௰௱௲ = 1000000 = பத்துநூறாயிரம் ௱௱௲ = 10,000,000 = கோடி ௰௱௱௲ = 100,000,000 = அற்புதம் ௱௱௱௲ = 1000,000,000 = நிகர்புதம் ௲௱௱௲ = 10,000,000,000 = கும்பம் ௰௲௱௱௲ = 100,000,000,000 = கணம் ௱௲௱௱௲ = 1,000,000,000,000 = கற்பம் 10,000,000,000,000 = நிகற்பம் ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 = பதுமம் 1000000000000000 = சங்கம் 10000000000000000 = வெல்லம் 100000000000000000 = அன்னியம் 1000000000000000000 = அர்த்தம் 10000000000000000000 = பரார்த்தம் 100000000000000000000 = பூரியம் 1000000000000000000000 = முக்கோடி 10000000000000000000000 = மஹாயுகம் இறங்குமுக கணித எண்கள் =============================== 1 - ஒன்று 3/4 - முக்கால் 1/2 - அரை கால் 1/4 - கால் 1/5 - நாலுமா 3/16 - மூன்று வீசம் 3/20 - மூன்றுமா 1/8 - அரைக்கால் 1/10 - இருமா 1/16 - மாகாணி(வீசம்) 1/20 - ஒருமா 3/64 - முக்கால்வீசம் 3/80 - முக்காணி 1/32 - அரைவீசம் 1/40 - அரைமா 1/64 - கால் வீசம் 1/80 - காணி 3/320 - அரைக்காணி முந்திரி 1/160 - அரைக்காணி 1/320 - முந்திரி 1/102400 - கீழ்முந்திரி 1/2150400 - இம்மி 1/23654400 - மும்மி 1/165580800 - அணு - ≈ 6,0393476E-9 - ≈ nano = 0.000000001 1/1490227200 - குணம் 1/7451136000 - பந்தம் 1/44706816000 - பாகம் 1/312947712000 - விந்தம் 1/5320111104000 - நாகவிந்தம் 1/74481555456000 - சிந்தை 1/489631109120000 - கதிர்முனை 1/9585244364800000 - குரல்வளைப்படி 1/575114661888000000 - வெள்ளம் 1/57511466188800000000 - நுண்மணல் 1/2323824530227200000000 - தேர்த்துகள் நீட்டல் அளவைகள் ================================ 10 கோன் - 1 நுண்ணணு 10 நுண்ணணு - 1 அணு ==> 10 Ångströms = 1 nanometer 8 அணு - 1 கதிர்த்துகள் 8 கதிர்த்துகள் - 1 துசும்பு 8 துசும்பு - 1 மயிர்நுணி 8 மயிர்நுணி - 1 நுண்மணல் 8 நுண்மணல் - 1 சிறுகடுகு 8 சிறுகடுகு - 1 எள் 8 எள் - 1 நெல் 8 நெல் - 1 விரல் 12 விரல் - 1 சாண் 2 சாண் - 1 முழம் 4 முழம் - 1 பாகம் 6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்) 4 காதம் - 1 யோசனை பொன் நிறுத்தல் =================================== 4 நெல் எடை - 1 குன்றிமணி 2 குன்றிமணி - 1 மஞ்சாடி 2 மஞ்சாடி - 1 பணவெடை 5 பணவெடை - 1 கழஞ்சு 8 பணவெடை - 1 வராகனெடை 4 கழஞ்சு - 1 கஃசு 4 கஃசு - 1 பலம் பண்டங்கள் நிறுத்தல் ======================================= 32 குன்றிமணி - 1 வராகனெடை 10 வராகனெடை - 1 பலம் 40 பலம் - 1 வீசை 6 வீசை - 1 தூலாம் 8 வீசை - 1 மணங்கு 20 மணங்கு - 1 பாரம் முகத்தல் அளவு ==================================== 5 செவிடு - 1 ஆழாக்கு 2 ஆழாக்கு - 1 உழக்கு 2 உழக்கு - 1 உரி 2 உரி - 1 படி 8 படி - 1 மரக்கால் 2 குறுணி - 1 பதக்கு 2 பதக்கு - 1 தூணி பெய்தல் அளவு, நிறுத்தல் அளவு =============================== 300 நெல் - 1 செவிடு 5 செவிடு - 1 ஆழாக்கு 2 ஆழாக்கு - 1 உழக்கு 2 உழக்கு - 1 உரி 2 உரி - 1 படி 8 படி - 1 மரக்கால் 2 குறுணி - 1 பதக்கு 2 பதக்கு - 1 தூணி 5 மரக்கால் - 1 பறை 80 பறை - 1 கரிசை 48 96 படி - 1 கலம் 120 படி - 1 பொதி நாள் - சிறுபொழுதுகள் ===================== ஒரு நாளில் அடங்கிய ஆறு சிறுபொழுதுகள் பின்வருமாறு 1. வைகறை 2. காலை 3. நண்பகல் 4. ஏற்பாடு 5. மாலை 6. யாமம் ஆண்டு - வருடம் - ஆறு பெரும்பொழுதுகள் ======================================== ஒரு வருடத்தை ஆறு பெரும் பொழுதுகளாக பிரித்தனர். அவை, 1. இளவேனில் (சித்திரை, வைகாசி ) 2. முதுவேனில் (ஆனி, ஆடி) 3. கார் (ஆவணி, புரட்டாதி) 4. கூதிர் (ஐப்பசி, கார்த்திகை) 5. முன்பனி ( மார்கழி, தை) 6. பின்பனி ( மாசி, பங்குனி) காலம் அளவுகள் - தெறிப்பளவு ====================== 2 கண்ணிமை - 1 நொடி 2 கை நொடி - 1 மாத்திரை 2 மாத்திரை - 1 குரு 2 குரு - 1 உயிர் 2 உயிர் - 1 சணிகம் 12 சணிகம் - 1 விநாடி 60 விநாடி - 1 நாழிகை 2 1/2 நாழிகை - 1 ஓரை 3 3/4 நாழிகை - 1 முகூர்த்தம் 2 முகூர்த்தம் - 1 சாமம் 4 சாமம் - 1 பொழுது 2 பொழுது - 1 நாள் 15 நாள் - 1 பக்கம் 2 பக்கம் (30 நாள்) - 1 மாதம் 6 மாதம் - 1 அயனம் 2 அயனம்(12 மாதங்கள்) - 1 ஆண்டு 60 ஆண்டுகள் - 1 வட்டம் காலம் அளவுகள் 2 - தெறிப்பளவு ========================= 1 நாழிகை = 24 நிமிடம் 2.5 நாழிகை = 1 மணி 3.75 நாழிகை = 1 முகூர்த்தம் 7.5 நாழிகை = 1 ஜாமம் ஜாமம் = 1 நாள் 7 நாள் = 1 வாரம் 2 பக்ஷம் = 1 மாதம் 2 மாதம் = 1 ருது / பருவம் 3 ருது / பருவம் = 1 அயனம் 2 அயனம் = 1 வருடம் காலம் அளவுகள் 3 - தெறிப்பளவு ======================== 1 நாள் = 60 நாழிகை = 24 மணி 1 மணி = 2.5 நாழிகை = 60 நிமிடங்கள் 1 நாழிகை = 24 நிமிடங்கள் 1 நாழிகை = 60 விநாழிகை 1 நிமிடம் = 2.5 விநாழிகை = 60 விநாடிகள் 1 விநாழிகை = 24 விநாடிகள் 1 விநாழிகை = 60 லிப்தம் 1 விநாடி = 2.5 லிப்தம் = 100 செண்டி விநாடிகள் 1 லிப்தம் = 40 செண்டி விநாடிகள் 1 லிப்தம் = 60 விலிப்தம் 1 செண்டி விநாடி = 1.5 விலிப்தம் = 10 மில்லி விநாடிகள் 1 விலிப்தம் = 6.6666 அல்லது 6.7 மில்லி விநாடிகள் 1 விலிப்தம் = 60 பரா 1 மில்லி விநாடி = 8.95 அல்லது 9 பரா = 1000 மைக்ரோ விநாடிகள் 1 பரா = 111 மைக்ரோ விநாடிகள் 1 பரா = 60 தத்பரா 1 மைக்ரோ விநாடி = .5 தத்பரா = 1000 நானோ விநாடிகள் 1 தத்பரா = 2000 நானோ விநாடிகள் பிறைகள் ==================== திங்களின் (சந்திரன்) சுற்றை வைத்து இரு பிறைகளாக பிரித்தனர். அவை, 1. வளர்பிறை (முழு வளர்பிறை - பௌர்ணமி) 2. தேய்பிறை (முழு தேய்பிறை - அமாவாசை) நாட்கள், வாரம் =================== 1. ஞாயிறு (சூரியன்) 2. திங்கள் (சந்திரன்) 3. செவ்வாய் 4. புதன் 5. வியாழன் (குரு) 6. வெள்ளி 7. சனி இவைகள் இந்திய வானவியலின் அடிப்படையில் ஒவ்வொரு கிரகங்களுக்கும் என அப்பெயர் அமைக்கப்பட்டது ஆகும். இதைப் பின்பற்றியே ஆங்கிலத்திலும் வழங்கப்படுகிறது. திதிகள் =================== பிரதமை த்விதை திரிதியை சதுர்த்தி பஞ்சமி சஷ்டி சப்தமி அஷ்டமி நவமி தசமி ஏகாதசி த்வாதசி த்ரோதசி சதுர்தசி பௌர்ணமி (அ) அமாவாசை தமிழ் மாதங்கள் ==================== சித்திரை = மேடம் = மேழம் = 30 நாள் வைகாசி = இடவம் = விடை = 31 நாள் ஆனி = மிதுனம் = ஆடவை = 31 நாள் ஆடி = கற்கடகம் = கடகம = 31 நாள் ஆவணி = சிங்கம் = மடங்கல் = 31 நாள் புரட்டாசி = கன்னி = கன்னி = 30 நாள் ஐப்பசி = துலாம் = துலை = 29 நாள் கார்த்திகை = விருச்சிகம் = நளி = 29 நாள் மார்கழி = தனுசு = சிலை = 29 நாள் தை = மகரம் = சுறவம் = 29 நாள் மாசி = கும்பம் = கும்பம் = 29 நாள் பங்குனி = மீனம் = மீனம் = 30 நாள் யுகங்கள் = உகங்கள் ============================ 1 கற்பம் 1000 சதுர் யுகம் 1 மனுவந்தரம் = 71 சதுர் யுகம் 1000 சதுர் யுகம் = 4 யுகங்கள் 4 யுகங்கள் = 43,20,000 ஆண்டுகள் கிருத யுகம் = 4 x 43,20,000 ஆண்டுகள் திரேதா யுகம் = 3 x 43,20,000 ஆண்டுகள் துவாபர யுகம் = 2 x 43,20,000 ஆண்டுகள் கலியுகம் = 1 x 43,20,000 ஆண்டுகள் 1 ஆண்டு வட்டம் = 60 ஆண்டுகள் (சிலர் இதை 64 ஆண்டுகள் எனக்கொள்ளும் வழக்கமும் இருக்கிறது) 1 ஆண்டு =12 மாதங்கள் (ஆங்கிலேய கணக்குப்படி முதலில் 10 மாதங்களே இருந்தன. பின்பு கணக்கு பிழையாகப்பட்டதால் இந்திய முறைப்படி 2 மாதங்கள் சேர்த்துக்கொண்டார்கள்.)
|