home loans

Manaosai 3

simplecaddy

Your cart is empty

Who's Online

We have 46 guests online
அஜீவனின் `நிழல்யுத்தம்´ (குறும்படம்) PDF Print E-mail
Arts - சினிமா
Written by முல்லை   
Tuesday, 21 October 2014 22:54
அரசியலில் ஒரே கட்சியில் உள்ளவர்களுக்குள் நிழல் யுத்தம் நடைபெறுவதுண்டு. அஜீவன் தந்திருப்பதோ குடும்பத்திற்குள் நடைபெறும் நிழல் யுத்தம்.

புலம்பெயர் வாழ்வில்தான் கதையைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார் அஜீவன்.

 

ஒரே வீட்டில் வாழும்  திருமணம் செய்யப்போகும் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் தங்களுக்குள் புரியும் ஒரு யுத்தம்.

நாயகியாக வரும் ராதிகாவின் பார்வையும், முகபாவமும் விரக்தியைக் காட்டுவதால் கதைக்கு நன்றாக ஒத்துப் போகின்றது. ஆனால்  இதைத் தவிர வேறு பாவங்கள் இந்த முகத்தில் பார்க்க முடியாது என்ற தோரணையில்  நிழல் யுத்தத்தில் அவர் வலம் வருவது ஒரு குறையே.

பிறந்தநாளுக்குத்தான் அந்தப்பரிசு என்று  வாங்கி வைத்திருக்கும் அந்தப் பரிசை  பாலகிருஸ்ணன் எடுத்து எறிந்து உண்மை நிலையை விளக்கும்போது குறைந்த பட்சம் ஒரு புன்னகையையாவது அவர் தந்திருக்க வேண்டாமோ? கோயிலுக்குப் போவதற்காக தன்னை அலங்கரிக்கும் போதும்  முகத்தில் விரக்தியைக் காட்டவேண்டிய கட்டாயம்தான் என்ன?


வெள்ளிக்கிழமை கோயிலுக்குக் கூட்டிச் செல்லாததற்கு 'சாமி என்னப்பா ஓடவே போகுது? „ என்று சமாளிப்பதும், ராதிகா பிரச்சனையைத் தொடங்கும் போது நாட்காட்டியில் பௌர்ணமியா, அமாவாசையா என்று பாலகிருஸ்ணன் பார்ப்பதும் அருமையான காட்சிகளாக  வந்திருக்கின்றன.

வேலைத் தளத்தில் நடக்கும் பிரச்சினைகள், அல்லது பாலகிருஸ்ணனின் வேலையிடத்தில் உள்ள அவருக்கான வேலை அழுத்தங்கள் அழுத்தமாகச் சொல்லப்படவில்லை. அடுத்தகாட்சியில் "வேலை செய்யிற இடத்திலைதான் 'வெள்ளைக்கார நாய் குலைக்குதெண்டு பாத்தால்... இஞ்சை வந்தால் நீ.." என்ற வாசகங்களாலேயே முதற்காட்சியைப் புரிந்து கொள்ள முடிகிறது.

கதவு திறக்கும் ஓசை, பாத்திரத்தோடு பருப்பு கருகும் ஓசை, குழாயால் தண்ணீர் ஓடும் ஓசை என்று இயற்கையான சத்தங்களோடு நிழல் யுத்தத்தில் ஒன்றிப்போனால் திடீரென பின்னணி இசை பெரிய சத்தத்தோடு வந்து யதார்த்தத்தை விலக்கி வைக்கின்றது.

பாத்திரங்களை இயற்கையாகவே உரையாடவிட்டிருக்கின்றார் பாலகிருஸ்ணன். பாராட்டுக்கள்.

கமரா, படத்தொகுப்பு என்பன அஜீவனுக்கு  அருமையாக வந்திருக்கின்றன. இந்தத் துறையில் அவருக்கான அனுபவங்களை அவை கட்டியம் கூறுகின்றன.

மொத்தத்தில் புலம் பெயர் வாழ்வில் எங்களவர்களின் குடும்பச் சண்டையை அழகாகப் படம்பிடித்துத் தந்திருக்கின்றார்கள் அஜீவன் குழுவினர். இவர்களிடமிருந்து மேலும் பல படைப்புக்கள் வரவேண்டும். நாம் அதைப் பார்த்து மகிழ வேண்டும்.

இறுதியாக ஒரு கேள்வி - இந்தக் குறும்படத்தின் மூலம், கணவன் பிழை செய்தாலும்,  உங்களைக் குறை சொன்னாலும்  அதைப் பெரிதுபடுத்தாமல் பெண்களே அவர்களை அனுசரித்துப் போங்கள் என்றா சொல்ல வருகிறீர்கள்? உங்களுக்கு அசாத்தியத் துணிச்சல்.

நேற்று எனக்கு ஒரு தொலைபேசி வந்தது. எதிர் முனையில்  எனது நண்பன். "இண்டைக்கு எங்கடை வீட்டிலை பருப்பு சட்டியோடை கருகிப் போச்சுது" என்றான். அவன் வீட்டிலும் நிழல் யுத்தம்.

யேர்மனியிலிருந்து
முல்லை
Last Updated on Tuesday, 21 October 2014 23:00