home loans

Manaosai 3

simplecaddy

Your cart is empty

Who's Online

We have 23 guests online
புத்தகங்கள்
யோகம் இருக்கிறது - குந்தவை PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by இரா.முருகன்   
Thursday, 14 April 2016 05:15
நண்பர் லண்டன் பத்மநாப ஐயர் புண்ணியத்தில் குந்தவை என்ற அருமையான ஈழத் தமிழ் எழுத்தாளரைப் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. குந்தவையின் 'யோகம் இருக்கிறது' சிறுகதைத் தொகுப்பு ஆர அமரப் படித்து அசை போடப்பட வேண்டிய ஒன்று. அத்தி பூத்தாற்போல் எழுதும் குந்தவை (இயற்பெயர் சடாட்சரதேவி) புலம் பெயராத ஈழ எழுத்தாளர். அவர் கதைகளுக்கு அசாத்திய வலிமை சேர்க்க இந்த ஒன்றே போதும். அகதியாக ஆயிரக் கணக்கான காதம் தள்ளி உட்கார்ந்து கொண்டு, இழப்பைப் பற்றிக் கழிவிரக்கத்தோடும் தன்னிரக்கத்தோடும் கதைப்பவை இல்லை அவை. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில், பிறந்த மண்ணை விட்டு வெளியேறாமல் அங்கேயே இருந்து நிகழ்த்தும் பதிவுகள் குந்தவையின் கதைகள். முந்திய வாக்கியத்தை நேரடியாக வாசிக்காமல், புலம் பெயர்ந்த ஈழ எழுத்தாளர்கள் பற்றிய ஒரு தமிழக எழுத்தாளரின் கருத்து என்று உள்வரியை வலிந்து நுழைத்துப் படிப்பவர்களைப் பற்றி நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை.

"யுத்த பூமியை விட்டு அலறி அடித்துக் கொண்டு வெளியேறாது மண்ணின் நேசிப்புடன் மக்கள் துயரங்களைப் பங்கிடும் ஒருத்தியாய் வாழ்ந்த நேர்மையினால், குந்தவையின் கதைகள் இரண்டு தசாப்த காலத் தமிழ் ஈழத்தின் உண்மையான வரலாறாகப் பதிவாகிறது" என்று எஸ்.பொ தன் முன்னுரையில் (எஸ்.பொவின் மித்ரா பதிப்பக வெளியீடு இந்தப் புத்தகம்) குறிப்பிடுவது நூறு சதவீதம் உண்மை.

எனக்குப் படிக்கக் கிடைத்தவரையில் வழமையானதாகப் படும் ஈழத் தமிழ் மன இயக்கத்துக்கும் எழுத்து நடைக்கும் மாறான (எஸ்.பொ, முத்துலிங்கம் போன்ற விதிவிலக்குகள் தவிர்த்து) அடங்கி ஒலிக்கும் குரலும், போர் மறுப்புத் தொனியும் எல்லாவற்றையும் விட முக்கியமான பெண்ணியப் பார்வையுமாக (இது பெண்ணியம் கூட இல்லை - தாயியம்) எழுதும் குந்தவை குறைந்த சொற்களில் கதை நடத்திப் போகிறார்.கதை நிகழ்வில் ஆசிரியரின் குறுக்கீடு ஒரு பிரகடனமாகவோ, விமர்சனமாகவோ, எள்ளலாகவோ குறைந்த பட்சம் வாக்கிய முடிவில் ஆச்சரியக் குறியாகவோகூட இல்லாத அதிசயம்தான் குந்தவை கதைகள ஆழ்ந்து படிக்க வைக்கிறது.

'பெயர்வு' என்று அற்புதமான ஒரு கதை.

போர் நடக்கும் பூமியிலிருந்து வெளியேறிக் கடலில் படகில் பல மணி நேரம் பயணம் செய்து இடம் பெயரும் இளம் தம்பதிகள், அவர்களுடைய குழந்தை பற்றிய கதை இது.

'எல்லாவற்றையும் அப்படியே போட்டது போட்டபடி விட்டு ஓடி வந்தாகி விட்டது.

வீட்டை விட்டு வெளியே வந்தபின், ஒரு இரவு கூட ஒழுங்காக நித்திரை என்ற ஒன்றில்லை. அதுவும் நேற்றிரவு ஒரு கண் மூடவில்லை.

படுக்கக் கிடைத்த இடம் ஒரு பள்ளிக்கூட மண்டபம். நித்திரை கொண்டிருக்கலாம். முடியவில்லை. வரும் வழியில் கைதடிப் பாலத்தைக் கடக்கையில் பாலத்தின் கீழ் நிறைந்திருந்த நீரில் மிதந்த குழந்தையின் உடல் சிற்றலைகளால் அலைப்புண்டதுபோல் அவள் நினைவிலும் அலைப்புண்டது. அதோடு, கைப்பிடிச் சுவரோடு, நாலு பேரின் கைத்தாங்கலுக்குள் திமிறிக் கொண்டு அரற்றிய அந்தத் தாயின் கதறல். பாவி. ஏன் இடுப்புக் குழந்தையைத் தவற விட்ட்டாள்? பாலத்தின் மேல் நடக்கையில் களைத்து விழுந்தாளோ? நெரிசலில் சிக்குண்டு கை தவற விட்டாளா?

படகின் மறு மூலையிலிருந்து ஒரு குழந்தை வீரிட்டுக் கத்துவது கேட்டது. தொடர்ந்து தாயின் சமாதானப்படுத்த முயலும் குரலும் கேட்டது.

சிவரஞ்சனி தன் மடியிலிருந்த அமுதனைத் தடவிக் கொடுத்தாள். அவனின் ஈரம் வழியும் உடலில் நீரை வழித்து விடும்போதெல்லாம் அவனுக்குக் காய்ச்சல் கீச்சல் வரக்கூடாதே என்று உள்ளுர அங்கலாய்ப்பாக இருந்தது.

கடல், படகு தன் உடம்பை படகு கிழித்துச் செல்வது பொறுக்காதது போல வாரித் தூற்றி இரைந்து கொண்டிருந்தது. படகில் இருந்தவர்கள் ஒவ்வொரு வாரியடிப்பிற்கும் உடல் கொடுத்து நனைந்த வண்ணம் இருந்தனர்.

முதலில் இந்த அலையடிப்பிற்குள் சிலிர்த்து சந்தோஷமாகச் சிரித்த அமுதன் கூட இப்பொழுது சோர்ந்து விட்டிருந்தான். பசிக் களைப்பு வேறு"

உலர்ந்து போன பன். குழந்தை சாதாரணமாகச் சாப்பிடாது அதை. பணியாரம் சாப்பிட்டுப் பழகிய அந்த மழலை பசி பொறுக்க முடியாமல், 'அம்மா, பாண் கொடுங்கோ' என்று கேட்கிறது. அம்மா மனம் உடைந்து போகிறாள். பன்னைக் கிழித்துக் குழந்தைக்கு ஊட்டும்போது பின்னால் இருந்து யாரோ பார்ப்பதுபோல் தோன்ற திரும்புகிறாள். பசித்த இன்னொரு குழந்தை ஏக்கத்தோடு அவளைப் பார்க்கிறது. பன்னின் இரண்டு துண்டங்களைப் பிய்த்து அந்தக் குழந்தையிடமும் நீட்டுகிறாள் இந்தத் தாய்.

குந்தவை என்ற ஒரு தாய் எழுதிய இந்தக் கதை போர்ப் பிரச்சாரம் செய்யும் எந்தக் கதையையும் விட உன்னதமானது. சர்வ தேசியத் தன்மை உண்டு இந்தத் தாய்மை எழுத்துக்கு.

விட்டுவிட்டு வந்த வீடு போரில் அழிகிறது. பஸ்ஸில் பயணம் செய்து அங்கே மீண்டும் போகிறாள் ஒருபெண். அவள் பார்வையில் அந்தப் பயணம் காட்சி ரூபமாக விரியும் கதை "வீடு நோக்கி".

Last Updated on Thursday, 14 April 2016 05:36
Read more...
 
நாளைய பெண்கள் சுயமாக வாழ... மின்னூல் PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by சந்திரவதனா   
Thursday, 17 March 2016 22:12
ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி என்று உலகம் வகுத்து வைத்த கோட்பாடு என்னை எப்போதும் விசனப்படுத்திக் கொண்டே இருந்தது.

சின்ன வயதில் சிந்தனைகள் எனக்குள்ளே விரிந்தாலும் பெண் என்ற ஒரே காரணத்தால் வாய் மூடி மௌனியாகவே இருந்தேன்.

காலப்போக்கில், பெண் என்பவள் ஆண் என்பவனை விட எதிலுமே குறைந்தவளல்ல என்பதைப் புரிந்து கொண்டேன்.

பல பெண்கள் சிறுகயிற்றில் கட்டப்பட்ட யானை போல தம் பலம் உணராது வாழ்வதையும், அடுத்தடுத்த சந்ததிக்கு அடிமைத்தனத்தைக் காவிச் செல்வதையும் கண்டு வெகுண்டேன்.

அதன் விளைவாக 1999 இலிருந்து 2005 வரையான காலப்பகுதியில் நான் எழுதியவைகளில் இருந்து - சிலவற்றைத் தேர்ந்தெடுத்து “நாளைய பெண்கள் சுயமாக வாழ“ என்றொரு மின்னூலை Android(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில், புது கிண்டில் கருவிகளில், குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில், இணையத்தில், இன்னும் பிற வடிவங்களில் படிக்க ஏதுவாக Epup, Mobi, Pdf A4, Pdf 6 Inch. Html ஆகிய வடிவங்களில் உருவாக்கியுள்ளேன்.

Free Tamil Ebooks (http://freetamilebooks.com/ebooks/nalayapenkalsuyamavala/) இன்று எனது அந்தமின்னூலை வெளியிட்டுள்ளது.

மின்னூலை Epup, Mobi, Pdf A4, Pdf 6 Inch. Html ஆகிய வடிவங்களில் பதிவிறக்க http://freetamilebooks.com/ebooks/nalayapenkalsuyamavala/

Epup - https://archive.org/download/1457609627/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4-1457345098.epub

Mobi https://archive.org/download/1457609627/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4-1457609627.mobi

இணையத்தில் படிக்க – http://21centurypennkal.pressbooks.com/

pdf 6 Inchhttps://archive.org/details/1457609627

pdf A4 https://archive.org/stream/1457609627/Pennkal%20%20A4%20Pdf%20-%20%20ila%20sundaram%2010#page/n0/mode/2up

சந்திரவதனா
16.03.2016
Last Updated on Friday, 14 October 2016 07:44
 
மனஓசை மின்னூல் PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by சந்திரவதனா   
Wednesday, 10 February 2016 10:41
நான் எழுதியவைகளை மின்னூல்களாகத் தொகுத்து விட வேண்டுமென்று பலகாலமாகவே விரும்பியிருந்தேன். சில தடவைகள் முயற்சித்தும் பார்த்தேன். அவைகள் எதுவும் எனது மனதுக்கு அவ்வளவு திருப்திகரமாக அமைந்திருக்கவில்லை. இந்த நிலையில்தான் எனக்கு Free Tamil Ebooks இன் அறிமுகம் கிடைத்தது.

அதில் எனது எழுத்துக்களை மின்னூலாக்குவதை விட அதில் இருக்கும் புத்தகங்களைத் தரவிறக்கி வாசிப்பது இன்னும் சுவாரஸ்யமாக இருந்தது. அப்படியே ஒரு வருடத்துக்கு மேலாக எனது படைப்புகளை மின்னூலாக்கும் எண்ணத்தை ஒரு புறம் வைத்துக் கொண்டு அங்குள்ள மின்னூல்களை அநுபவித்துக் கொண்டிருந்தேன்.

இந்த நிலையில் வேறு தேடல்களின் போது இணையத்தளங்களில் எனது ஆக்கங்கள் பலதைக் கண்டேன். அது சந்தோசம்தானே என நீங்கள் எண்ணலாம். எனக்கு சந்தோசம் தரவில்லை. வியப்பாக இருந்தது. அப்படியே முழுமையாக எனது கட்டுரைகள் வெவ்வேறு நபர்களின் பெயர்களில் இருந்தன. இன்னும் இருக்கின்றன.

அதன் பின்தான் கண்டிப்பாக எனது எழுத்துக்களை மின்னூலாக்கி விட வேண்டுமென்று நினைத்து செயற்பட்டேன். http://freetamilebooks.com/ எனக்கு வழிகாட்டியாகவும், பிடித்தமானதாகவும் இருந்தது.

அந்த வழிகாட்டலுடன் http://pressbooks.com/ இல் பரீட்சார்த்தமாக எனது மனஓசை நூலையே மின்னூலாக்கினேன். முதல் முயற்சி என்பதால் நிறைய நேரங்களைச் செலவழித்தேன். ஆனால் சில விடயங்களைக் கற்றுக் கொண்டேன். சில மென்பொருட்கள் பற்றியும் அறிந்து கொண்டேன்.

Free Tamil Ebooks (http://freetamilebooks.com/ebooks/manaosai-short-stories/) நேற்று எனது மனஓசை மின்னூலை வெளியிட்டது.

Android(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில், புது கிண்டில் கருவிகளில், குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில், இணையத்தில், இன்னும் பிற வடிவங்களில் படிக்க ஏதுவாக Epup, Mobi, Pdf A4, Pdf 6 Inch. Html ஆகிய வடிவங்களில் இந்நூல் உருவாகியுள்ளது. இது எனது பரீட்சார்த்த முயற்சியே.

எனது மற்றைய படைப்புகளையும் ஒவ்வொன்றாகத் தொகுத்து விரைவில் சில மின்னூல்களைத் தயாரித்து விடும் என் எண்ணத்தை செயற்படுத்துவேன் என்று நம்புகிறேன்.

நீங்களும் உங்கள் படைப்புகளை இப்படி மின்னூல் ஆக்கலாம்.

- சந்திரவதனா
10.02.2016Comments

வணக்கம்
உங்கள் கதைகளில் எனக்குப் பலகதைகள் பிடித்திருந்தாலும் நீங்கள் எழுதிய வேஷங்கள், பாதை எங்கே? என்ற இரண்டு கதைகளும் எங்களுக்கு மிகுந்த மனவேதனையைத் தருவதோடு உங்கள் மீது இருந்த மரியாதையையும் குறைத்திருக்கிறது.

இப்படியான கதைகளின் மூலம் நீங்கள் சொல்லவருவது என்ன? உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள், எம்மத்தியில் தன்குடும்பத்திற்காக தங்கள் வாழ்வைத் தொலைத்த பல ஆண்பிள்ளைகள் இல்லையா? உங்கள் கதைகளில் வரும் நபர்கள் உண்மையாக இருந்தாலும் லட்சத்தில் ஒரு ஆளாக இருக்கலாம் (விதி விலக்குகள் ) இவர்களைப் பற்றி எழுதி உங்கள் தரத்தை ஏன் குறைக்கிறிர்கள்?

நன்றி
என்றும் உங்கள் அன்பு வாசகன்
பிலிப் ராஜ்குமார்
Mon, Oct 23, 2017 at 3:37 PM
Last Updated on Tuesday, 24 October 2017 08:03
 
தாமரைச்செல்வியின் படைப்புகள் பற்றி PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by தமிழினி ஜெயக்குமாரன்   
Monday, 19 October 2015 08:23
ஈழத்துப்பெண் எழுத்தாளர்களில் தாமரைச்செல்வியின் கதைகளுக்கு முக்கிமானதோரிடமுண்டு. அந்த இடத்துக்கு முக்கிய காரணங்களிலொன்று இவர் தான் வாழ்ந்த காலகட்டத்து சமூக, அரசியல் பின்புலத்தில் தன் கதைகளைப்புனைந்திருப்பதுதான். இவரது கதைகள் பலவற்றில் தொண்ணூறுகளில் ஏற்பட்ட ஈழத்துத்தமிழ் மக்களின் இடப்பெயர்வுகள், நிலவிய போர்க்காலச்சூழல் மற்றும் இயற்கை அழிவுகள் அதிக அளவில் விபரிக்கப்படுகின்றன. இவரது கதைகள் பொதுவாக பரந்தன், கிளிநொச்சி மட்டும் வன்னிபிரதேசத்தை மையமாக வைத்துப்பின்னப்பட்டவை. போர்ச்சூழல் மக்களுக்கு, பல்வேறு வயதினருக்கு ஏற்படுத்திய பாதிப்புகள், குறிப்பாக உளவியற் பாதிப்புகள் பற்றியெல்லாம் வெளிப்படுத்துபவை. அதே சமயம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்து , ஒரு குறிப்பிட்ட பிரதேசத்துத் தமிழ் மக்களின் இருப்பினை, மேலும் அவர்களது காலகட்டத்துச் சமூக, அரசியற் சூழல் ஏற்படுத்திய பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஆவணங்களாகவும் இவரது படைப்புகள் இருக்கின்றனவென்றும் கூறலாம்.

அண்மையில் என் சேகரிப்பிலிருந்த புத்தகங்கள் மத்தியில் தேடிக்கொண்டிருந்தபொழுது இவரது 'வீதியெல்லாம் தோரணங்கள்' குறுநாவல் மற்றும் 'வன்னியாச்சி' (சிறுகதைத்தொகுப்பு) ஆகியவை மீள அகப்பட்டன. அவற்றை வாசித்தபொழுதே மேற்படி எண்ணங்கள் முகிழ்த்தன. மேற்படி 'வீதியெல்லாம் தோரணங்கள்' குறுநாவல் வீரகேசரி நிறுவனம் யாழ் இலக்கிய வட்டத்துடன் இணைந்து நடாத்திய கனகசெந்திநாதன் குறுநாவல் போட்டியில் இரண்டாவது இடத்தைப்பெற்ற குறுநாவல்.
Last Updated on Monday, 19 October 2015 08:30
Read more...
 
ஆறாவடு - சயந்தன் PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by இல கோபால்சாமி   
Wednesday, 12 November 2014 09:29
அருமையான வாசிப்பனுபவம் : ´ஆறாவடு´

நேற்று வாசித்து முடித்த அருமையானதொரு புத்தகம் இது. சுவிஸ் நாட்டில் வசித்து வரும் புலம் பெயர் தமிழரான சயந்தன் எழுதி இருக்கிறார்.

நீர்க்கொழும்பில் இருந்து இத்தாலி நாட்டிற்குப் படகுப் பயணம் மேற்கொள்ளும் ஒரு போராளியின் முந்நிகழ்வு (பிளாஷ் பேக்) நினைவாக கதை விரிகிறது. அவர் இயக்கத்தில் சேர்வது ஒரு சுவாரசியமான கதை. தான் வாங்கிய சோலாபுரி செருப்பை ஒருவன் திருடிவிடுகிறான். அவன் இலங்கையில் மையமிட்டுள்ள இந்திய ராணுவத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவன். அவனுடன் ஏற்பட்ட தகராறு இவரை பெரும் சோதனைக்கு ஆளாக்கிவிடுகிறது. அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் அவரை இயக்கத்தில் சேர்ந்து பணியாற்ற உந்துகிறது. மேம்போக்காகப் பார்த்தால் ஒரு செருப்புக்கான சண்டை காரணம் போலத் தோன்றும், ஆனால் நாம் எதிர்பாராத சில சிறிய நிகழ்வுகள் கூட நம் வாழ்கைப் பாதையின் போக்கை மாற்றிவிடும் என்பதற்கு இது ஒரு உதாரணமாகப் பட்டது.
Last Updated on Tuesday, 24 February 2015 10:32
Read more...
 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 4 of 11