home loans

Manaosai 3

simplecaddy

Your cart is empty

Who's Online

We have 20 guests online
புத்தகங்கள்
நிலவுக்குத்தெரியும் - சந்திரா ரவீந்திரன் (சிறுகதைத் தொகுப்பு) PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by என்.செல்வராஜா   
Saturday, 14 July 2012 06:22

இலண்டனில் சந்திரா இரவீந்திரனின் நிலவுக்குத்தெரியும்' நூல் வெளியீட்டு நிகழ்வும், ஆய்வுரை/பதிலுரையும்

கடந் ஞாயிற்றுக்கிழமை, 18.3.2011 அன்று லண்டன் என்பீல்ட் நகரில் Dugdale Centre மண்டபத்தில் அவை நிறைந்த நிகழ்வாகவும் நல்லதொரு குடும்ப நிகழ்வாகவும் சந்திரா இரவீந்திரனின் நிலவுக்குத் தெரியும் சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டு நிகழ்வு நிகழ்ந்தேறியது
  
வடமராட்சி-பருத்தித்துறையில் மேலைப் புலோலியூர், ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் சந்திரா. 1991இல் பிரித்தானியாவுக்கு இடம்பெயரும்வரை யாழ்ப்பாண அரச செயலகத்தில் பணியாற்றியவர். இவர் 1981இல் (செல்வி) சந்திரா தியாகராஜா என்ற பெயரில் தனது கன்னிப்படைப்பான `ஒரு கல் விக்கிரகமாகிறது´ என்ற சிறுகதையை எழுதி எழுத்துலகில் நுழைந்தவர். வடமராட்சியில், பருத்தித்துறை யதார்த்தா இலக்கிய வட்டத்தினால் இவரது முதலாவது சிறுகதைத் தொகுதியான நிழல்கள் 1988இல் வெளியிடப்பட்டது. ஈழமுரசு, ஈழநாடு ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்த 5 சிறுகதைகளினதும் 1984-85 இரசிகமணி கனக. செந்திநாதன் நினைவுக்குறுநாவல் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற நிச்சயிக்கப்படாத நிச்சயங்கள் என்ற குறுநாவலினதும் தொகுப்பாக நிழல்கள் முன்னர் வெளிவந்திருந்தது. லண்டன், .பீ.சீ. அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் 2009வரை, ஏழாண்டு காலமாக  இலக்கிய நிகழ்ச்சிகளை வழங்கியிருந்தார்.
Last Updated on Tuesday, 21 October 2014 22:24
Read more...
 
தொலைநோக்கி - (நா.யோகேந்திரநாதன்) PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by Chandra   
Friday, 07 August 2009 05:05
நா.யோகேந்திரநாதனின் "தொலைநோக்கி" நூல் வெளியீடு

புலிகளின்குரல் வெளியீட்டுப் பிரிவின் வெளியீடான நா.யோகேந்திரநாதனின் "தொலைநோக்கி" நூல் 8.10.2006 அன்று வெளியிடப் பட்டது. புலிகளின் குரல் நடுவப் பணியகத்தில் 8.10.2006 அன்று ஞாயிற்றுக் கிழமை மாலை 3 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வுக்கு புலிகளின்குரல் பிரதம செய்தி ஆசிரியர் தி.தவபாலன் தலைமை தாங்கினார். பொதுச்சுடரினை தமிழீழ மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் பொன்.தியாகம் ஏற்றினார். தமிழீழத் தேசியக் கொடியினை தமிழீழ கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் கவிஞர் புதுவை இரத்தினதுரை ஏற்றினார்.
Last Updated on Tuesday, 11 March 2014 20:20
Read more...
 
தொப்புள்கொடி (நாவல்) PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by Chandra   
Monday, 08 February 2010 07:53
மனஓசையின் 3வது வெளியீடாக தொப்புள் கொடி நாவல்

தொப்புள்கொடி - நாவல்
ஆசிரியர்: தெ.நித்தியகீர்த்தி (Australia)
முதற்பதிப்பு: சித்திரை 2009
அட்டை வடிவமைப்பு:மூனா
தயாரிப்பு: சுவடி பதிப்பகம்
வெளியீடு: மனஓசை பதிப்பகம்

தொடர்புகளுக்கு:
Chandravathanaa
Nithyakeerthy

ISBN - "978-3-9813002-2-2"
Last Updated on Tuesday, 11 March 2014 20:20
 
புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் நாவல்கள் PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by கே. எஸ். சுதாகர்   
Monday, 17 February 2014 06:59

[புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் நாவல்கள் எனும்போது அவர்கள் தாயகத்தில் இருக்கும்போது எழுதி வெளியிட்ட நாவல்களை இங்கு நான் கருத்தில் கொள்ளவில்லை. மேலும் இங்கே குறிப்பிடும் எல்லா நாவல்களையும் வாசிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிட்டவில்லை. இருப்பினும் தரவிற்காக அவற்றையும் சேர்த்துள்ளேன்.]

உலகில் எத்தனையோ நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள், சமகால தமிழ் இலக்கியத்தில் ஒரு முக்கிய கூறாக இருக்கின்றன. காலத்துக்குக் காலம் மக்கள் பல்வேறு காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்துள்ளார்கள். இவ்வாறு புலம்பெயர்ந்தவர்களில் தமிழர்கள் படைக்கும் படைப்புகளை ‘புலம்பெயர் தமிழ் இலக்கியம்’ எனவும் ‘புகலிட தமிழ் இலக்கியம்’ எனவும் இரு தொடர்களால் அழைக்கின்றோம். இதில்கூட சில மாற்றுக்கருத்துகள் நிலவுவதைக் காணலாம். திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன், ‘புலம்பெயர்ந்தோர் இலக்கியம்’ என்று கூறுவது தவறு என்றும், அதை ‘அந்தந்த நாட்டு தமிழ் இலக்கியம்’ என்று சொல்லலாம் என்றும் சொல்கின்றார். அவர் கூறும் சொற்றொடர் ஓரளவிற்கு ‘புகலிட தமிழ் இலக்கியம்’ என்பதையே சுட்டி நிற்கின்றது.

Last Updated on Tuesday, 11 March 2014 10:04
Read more...
 
ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் - கணேசன் (ஐயர்) PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by சஷீவன்   
Sunday, 09 February 2014 08:15
லண்டன் விமர்சனக் கூட்டத்தில் சஷீவன்

மனிதர்கள் தமது வரலாற்றைத் தாமே உருவாக்குகிறார்கள். ஆனால் தமது  விருப்பத்திற்கேற்ப அதை அப்படியே உருவாக்குவதில்லை;      அவர்களே தேரிந்தெடுத்துக் கொண்ட ஒரு சூழலில் அவர்கள் அதை உருவாக்குவதில்லை. ஆனால் கடந்த காலத்திலிருந்து நேரடியாக வந்து   சேர்ந்த, கொடுக்கபப்ட்ட, கடத்தப்பட்ட சூழலில் அதை உருவாக்குகிறார்கள். – கார்ல் மார்க்ஸ்

== பகுதி 1 ==

ஈழப்போராட்டம் – ஆயுதம் தாங்கிய ஈழப்போராட்டம் அண்ணளவாக 30 ஆண்டுகால தொடர்ச்சியாலானது. விரல்விட்டு எண்ணக்கூடிய முக்கிய இயக்கங்களின் பங்களிப்புக்களும் ஏராளமான சிறிய இயக்கங்களின் பங்களிப்புக்களுமாக – மிகப்பெரிய பொருண்மையுடையது. ஒரு சில எழுத்துப்பிரதிகளைக் கொண்டு அதனை அளவிட்டுவிடவும் முடியாது. பல்வேறுபட்ட செயற்பாட்டாளர்கள் – எவ்வித செயற்பாடுகளிலும் ஈடுபடாத சாதாரண மக்களுடைய விருப்பு வெறுப்பிற்கு அப்பாற்பட்ட கருத்து வெளிப்பாடுகளின் தொகுப்பின் மூலமே – அதன் பொருண்மையான வடிவத்தை ஓரளவுக்கேனும் கற்பனை செய்து கொள்ளலாம். அமைப்பிற்கு வெளியேயிருந்தான பார்வைகளும் – அமைப்பை விட்டு வெளியேறியவர்களுடைய காய்தல் உவத்தலற்ற விமர்சனப் பாங்குமே வரலாற்றை ஓரளவிற்கேனும் முழுமைப்படுத்த எத்தனிக்கின்றது. கடந்த காலம் தொடர்பான மோகத்திற்கப்பாலிருந்து பதிவு செய்யப்படும் சம்பவங்கள் தனியே வரலாறாக எஞ்சிப்போவதில்லை.

அவை, எதிர்காலத்திற்கான நகர்வுகளைத் தீர்மானிக்கக்கூடியவையாகவும் – அவற்றிற்கான படிக்கட்டுக்களாகவும் அமைகின்றன என்ற புரிதலிலிருந்தே இப்பிரதியை அணுக வேண்டியுள்ளது. எமக்கு முன்னைய தலைமுறையினருக்கு – போராட்டத்தை உருவாக்கியவர்களுக்கும் – பங்கு கொண்டவர்களுக்கும் – பக்கத்திலிருந்து பார்த்தவர்களுக்கும் இவை வெறும் சம்பவங்களாக இருக்கலாம். ஆனால், அதனை அறியாதவர்களுக்கும் அதன் பின்னைய தலைமுறையைச் சார்ந்தவர்களுக்கும் அவை வரலாறுகள். தமது வாழ்க்கைக்காலத்தில் சரியான முடிவுகளை எடுப்பதற்கு அடிப்படையான ஆதாரங்கள்.ஈழப்போராட்ட வரலாற்றில் இயக்கங்களின் தோற்றம், அவற்றின் செயற்பாடுகள் தொடர்பான முக்கிய ஆவணப்பதிவுகள் என்று பார்த்தால் கீழ்வரும் நூல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

Last Updated on Tuesday, 11 March 2014 09:56
Read more...
 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 6 of 11