home loans
பண்பாடு
நாட்டுப்புறத்தில் வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் PDF Print E-mail
Tamils - பண்பாடு
Written by எழிலவன்   
Tuesday, 18 August 2009 21:16
மானிடவியலார் பண்பாட்டினைப் பொருள்சார் பண்பாடு, பொருள்சாராப் பண்பாடு என்று இருவகைப் படுத்துவர். பொருள்சார் பண்பாட்டில் மக்களது உணவு, உடை, உறையுள் குறித்த அனைத்துப் பொருட்களும் அடங்கும். பொருள்சாராப் பண்பாட்டில் அவர்தம் பழக்க வழக்கங்கள், ஆசைகள், நம்பிக்கைகள், சடங்குகள், வழிபாடுகள் ஆகியவை அடங்கும்.

பண்பாட்டினை மீட்டுருவாக்கம் செய்வதற்குத் தரவுகள் அவசியம். அவற்றை அளிப்பவை நாட்டுப்புற வழக்காறுகள் என்பர். நமது முன்னோரின் கலைத் திறனை வெளிப்படுத்துகிற விழாக்கள், ஒழுகலாறுகள், உணவு முறைகள், விளையாட்டுக்கள், நாட்டுப்புற மருந்து வகைகள், நாட்டுப்புறப் பொருட்கள் முதலியன சேகரிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டு ஆழமாக ஆய்வு செய்யப்பட வேண்டும். (பரமசிவையா, ஜே.எஸ்., 1980:41) நாட்டுப்புறத்தில் பயன்படும் வீட்டு உபயோகப் பொருட்கள் குறித்த விவரங்கள் பொருள்சார் பண்பாடு பற்றிய பல செய்திகளை அதன் பின்புலத்தோடு அறிந்து கொள்ள உதவும். எனவே பொருள்சார் பண்பாடு சார்ந்த கோணங்களில் நாட்டுப்புறவியல் ஆய்வுகள் செய்யப்படும் தேவை உள்ளது. இந்தக் கட்டுரை அவ்வகையில் வலது கால் எடுத்து வைத்துள்ளது. இதன் நோக்கம் நாட்டுப்புறத்தில் மரபுவழி வந்த உணவு சார் வீட்டு உபயோகப் பொருட்களின் தற்போதைய நிலையினைக் கண்டறிவதும், மறைந்து போன பொருட்கள்/கருவிகள் ஆகியவற்றை வெளிப்படுத்துவதும், நவீன வாழ்வின் கூறுகளுக்கேற்பப் பல பொருட்கள் எவ்வாறு தங்களைத் தகவமைத்துக் கொண்டுள்ளன என்பதை அறிதலும் ஆகும்.
Last Updated on Friday, 19 November 2010 10:47
Read more...
 
தாலியின் சரித்திரம் PDF Print E-mail
Tamils - பண்பாடு
Written by முனைவர் தொ.பரமசிவன்   
Wednesday, 22 April 2015 06:00
கி.பி.10ஆம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலி என்ற பேச்சே கிடையாது.

தாலி கட்டுதல், திருப்பூட்டுதல், மாங்கல்ய தாரணம் ஆகிய சொற்கள் பெண்ணின் கழுத்தில் ஆண் தாலி அணிவிப்பதைக் குறிக்கின்றன. தாலி கட்டும் நிகழ்ச்சி நடக்கும்போது மணமக்களுக்குப் பின்னால் மணமகனின் சகோதரி அல்லது சகோதரி முறை உள்ளவர்கள் கட்டாயம் நிற்க வேண்டும். மணமகனுக்குத் தாலி முடிச்சுப் போட அவள் உதவி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பெருவாரியாக நிலவி வரும் வழக்கம் இதுவே.

மணவறையில் அல்லாமல் ஊர் மந்தையில் நின்றுகொண்டு தாலி கட்டும் வழக்கமுடைய ஜாதியாரிடத்திலும் சகோதரி மணமகனுக்குத் தாலி கட்டத் துணை செய்கிறாள். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட ஒன்றிரண்டு ஜாதியாரிடத்தில் இரண்டு வீடுகளுக்கு இடையில் உள்ள சந்து அல்லது முடுக்குக்குள் சென்று மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டுவது சில ஆண்டுகளுக்கு முன்வரை வழக்கமாக இருந்தது. இது வன்முறையாகப் பெண்ணை வழிமறித்துத் தாலிகட்டிய காலத்தின் எச்சப்பாடாகும்.

ஒரு நூற்றாண்டு முன்வரை சில ஜாதியாரிடத்தில் மணமகள் திருமண நிகழ்ச்சிக்கு வர முடியாதபோது மணமகனை அடையாளப்படுத்த அவன் வைத்திருக்கும் பொருள்களில் ஒன்றைக் கொண்டுவந்து மணமகளின் பக்கத்தில் வைத்து மணமகனின் சகோதரி தாலி கட்டுகிற வழக்கம் இருந்திருக்கிறது.
Last Updated on Wednesday, 22 April 2015 06:31
Read more...