home loans

Manaosai 3

simplecaddy

Your cart is empty

Who's Online

We have 19 guests online
Literatur


பிழைக்கத் தெரிந்தவள் (அரை நிமிடக் கதை) PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by கவி அருணாசலம்   
Saturday, 20 October 2018 19:13
நீண்ட நாட்களுக்குப்பின் சரஸ்வதி ரீச்சரை சந்தித்தேன். கையில் பூங்கொத்து வைத்திருந்தார். அவரது உடலில், பேச்சில் தளர்வு தெரிந்தது.

சரஸ்வதி ரீச்சர் பிரதான புகையிரத நிலையத்தில் பூக்கடை நடாத்தி வருகிறார். கடையில் காலையில் இருந்து இரவு வரை வியாபாரத்தைக் கவனிக்க வேண்டியதால் அவரை வெளி இடங்களில் காண்பது அரிது.

“எப்பிடி இருக்கிறீங்கள்?”

“என்னத்தைச் சொல்ல....” சரஸ்வதி ரீச்சரின் வார்த்தை இழுப்பில் அவரிடம் இருந்த அலுப்பு தெரிந்தது.

ஆனாலும் நான் கேட்டதுக்கு அவர் உடனேயே பதில் தந்தார்.

“கை கொஞ்சக் காலமா விறைக்குது. ஒத்தோப்பேடியிட்டைப் போறன்”

“carpal tunnel பிரச்சினையாக இருக்கலாம்’
Last Updated on Saturday, 20 October 2018 19:19
Read more...
 
காணி நிலம் வீடு (அரை நிமிடக் கதை) PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by கவி அருணாசலம்   
Saturday, 20 October 2018 19:03
சின்னச் சின்ன தீவுகள் போல் திட்டுத் திட்டாக அவனது கைகளில் அங்கங்கே வீக்கங்கள் தெரிந்தன.

எனது பார்வையின் கேள்வியை கணேசன் புரிந்து கொண்டான்.

“கிட்னி பெயிலியர் மச்சசான். மூன்று நாளுக்கு ஒருக்கால் டயாலிசிஸ் செய்ய வேண்டி இருக்குது. அதனாலை வந்த வீர வடுக்கள்”

நீண்ட நாட்களுக்கும் பிறகு.... இல்லை நீண்ட வருடங்களுக்குப் பிறகு என்பதுதான் சரியாக இருக்கும் அவனை அப்படிப் பார்த்ததில் மனது சிரமப்பட்டது.

எனது சங்கடம் அவனுக்கு விளங்கி இருக்கும்.

“கிட்னி மாத்திறதுக்கு ஏற்கனவே கனக்க யேர்மன்காரங்கள் காதிருக்கிறாங்கள். எங்கள் தரவளிக்கு இஞ்சை கிடைக்க வாய்ப்பேயில்லை. ஊரிலை பாக்கலாமெண்டால் காசு தந்திட்டு பெட்டியைக் கட்டிக் கொண்டு போ கிட்னி சட்னி எல்லாம் கிடைக்காது எண்ட மாதிரித்தான் பேச்சு இருந்தது”
Last Updated on Saturday, 20 October 2018 19:30
Read more...
 
யுகங்கள் கணக்கல்ல - கவிதா PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by சந்திரவதனா   
Tuesday, 16 October 2018 18:19
அரை குறையாக வாசித்து, இடையிலே விட்டு விட்ட கவிதாவின் (Cavitha Cegu) `யுகங்கள் கணக்கல்ல´ சிறுகதைத் தொகுப்பை மீண்டும் வாசிக்கத் தொடங்கினேன். வாசிக்கும் போதான மனநிலையும் ஒரு படைப்பின் தரத்தையும், கனத்தையும் நிர்ணயிக்குமோ என்று எண்ணும் படியாக முதலில் நான் வாசித்த போதிருந்ததையும் விட வேறுவிதமான பரிமாணங்களை அக்கதைகளில் கண்டேன்.

1969-1970 இல் எழுதப்பட்ட சிறுகதைளை இன்று வாசிக்கக் கூடிய சாத்தியம் மகிழ்விற்குரியது. அவை அன்றைய ஒரு பெண்ணால் எழுதப்பட்ட கதைகளாக இருப்பது தனித்துவமானதும் கூட.

1960-1970 களில் கவிதா எப்படியெல்லாம் சிந்தித்திருக்கிறார்!
வியப்பாக இருக்கிறது.

பாலியல்கல்வியின் அவசியம் பற்றி `மானிடவர்க்கென்று பேச்சுப்படின்´ என்ற கதையில் பேசுகிறார். இன்றைக்குக் கூட அதை எதிர்ப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அன்று கவிதா அது பற்றிச் சிந்தித்திருக்கிறார். முதல் குருதிவெளியேற்றத்தைப் பற்றியே ஒரு பெண்குழந்தைக்கு விளக்கமளிக்கத் திராரணியற்ற சமூகச்சூழல்தான் அன்று இருந்தது. அந்த நேரத்தில் கவிதாவின் சிந்தனை இப்படி விரிந்திருக்கிறது. வியந்து நோக்காமல் இருக்க முடியுமா?
இப்போது நான் "செக்ஸ் எஜூகேஷன்' நம் நாட்டில் இல்லாமையை ஒரு பெரிய குறையாக உணர ஆரம்பித்தேன். அரிஸ்டாட்டில் காலம் தொடக்கம் உலகம் பெற்று வந்திருக்கிற அறிவை எல்லாம் ஒருவனின் மூளைக்குள் திணிப்பதுடன் கல்வியின் வேலை முடிந்து விடுகிறதா? இந்தச் சிக்கலான சமுதாயத்தில் தன்னைப் பொருத்தப்பாடுள்ளவகை ஆக்கிக்கொண்டு வாழ வழி வகுப்பது அதன் வேலை இல்லையோ...
என்று ஆதங்கப் பட்டுள்ளார்.
Last Updated on Tuesday, 16 October 2018 18:43
Read more...
 
அம்மாவின் தேவைகள் PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by சந்திரவதனா   
Monday, 24 September 2018 11:10
அம்மா திரும்பத் திரும்ப பலதடவைகள் தொலைபேசியில் என்னை அழைத்து விட்டா. ஒவ்வொரு முறை கதைக்கும் போதும் பத்துத் தடவைகளுக்கு மேலாக 'எப்பவடா வருவாய்?' என்று கேட்டு விட்டா.

போனமாசம்தான் போயிட்டு வந்தனான். எப்போதும் இப்படித்தான். ஒன்றரை மணித்தியால ஓட்டம். போய் சில மணிநேரங்கள் நின்று வருவேன். திரும்பிய அடுத்த நாளே தொலைபேசி கிணுகிணுக்கும். 'எப்பவடா வருவாய்?' என்றுதான் கதைகக்கத் தொடங்குவா.

உணவக வேலை. கிழமையில் ஒரு நாள்தான் விடுப்பு. அந்த ஒரு நாளும் அம்மாவிடம் வெளிக்கிட்டால் வீட்டில் பிரச்சனை. மனுசி மூஞ்சையைத் தூக்கி வைச்சுக் கொண்டிருப்பாள்.

போகப்போறேன் என்றதும், அவள் செய்கைகள் எல்லாம் மாறிவிடும். தேத்தண்ணியை மேசையில் `டொங்´ என்று வைப்பாள். கதவைச் சாத்தும் போது ஒரு வித வேகத்துடன் சாத்தி பெருமொலி எழுப்புவாள். குசினிக்குள் பாத்திரங்களை உடைக்காத குறையாய் உருட்டுவாள்.

„உனக்கென்ன, உன்ரை அம்மாவை யேர்மனியிலை கூட்டிக் கொண்டு வந்து வைச்சுக் கொண்டாடிக் கொண்டிரு“ என்பாள். பார்வையால் எரிச்சலைத் தெளிப்பாள்.
Last Updated on Saturday, 20 October 2018 19:10
Read more...
 
என் கொல்லைப்புறத்துக் காதலிகள் PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by சந்திரவதனா   
Friday, 14 September 2018 21:34
என் கொல்லைப்புறத்துக் காதலிகள் பற்றி நான் முன்னமே கேள்விப் பட்டிருக்கிறேன். படலை இணையத்தளத்தில் தொடராக வெளிவந்தது என்றும் அறிந்திருக்கிறேன். படலை தளத்தில் இது வெளிவந்த காலத்தில் ஜேகே என்னும் Jeyakumaran Chandrasegaram என்றொருவர் வாழ்ந்து கொண்டிருப்பதோ, எழுதிக் கொண்டிருப்பதோ எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

ஓரிரு வருடங்களின் முன்னர் - 2016ஆக இருக்கலாம். தற்செயலாக அவரது எழுத்துக்களை முகநூலில் காணக்கிடைத்து மிகவும் ரசித்து வாசித்தேன்.

அதன் பின்னான ஒரு பொழுதில், அவரது இந்த ´என் கொல்லைப்புறத்துக் காதலிகள்` நூலை Amazon இல் கண்டு, பரீட்சார்த்த வாசிப்புக்காகத் தரவிறக்கக் கூடிய ´பங்கர்´ என்ற பதிவையும் `கடவுள்` என்ற பதிவையும் தரவிறக்கி வைத்திருந்தேன்.

மீண்டும் ஒரு தற்செயலாக நேற்று அந்த `பங்கர்´ என்ற பதிவை, எனது Kindle இல் கண்டு வாசித்தேன்.

ஒருவித அன்னியோன்னியமான எழுத்து. எளிமையான நடை. கடினமான வார்த்தைகளற்ற, பாமரரும் விளங்கிக் கொள்ளக்கூடிய சொற்பிரயோகங்கள். கொடுமையான பங்கர் வாழ்வைக் கூட ரசனையுடன் எழுதியிருக்கும் தன்மை.

அப்படியே பங்கருக்குள் இறங்கி அவரது குடும்பத்துடன் வாழ்ந்து விட்டு வந்தது போன்றதொரு உணர்வு.

சில பயனுள்ள தகவல்களும் கிடைத்துள்ளன. உங்களுக்குச் சிலவேளை தெரந்திருக்கலாம். எனக்குப் புதிதாக இருந்தன. பீப்பீ ஊத, வடை தட்ட, ஆட்டுக்கு உணவாக வெட்டிப்போட, வேலிக்குக் கதியாலாக... என்றளவிலான பூவரசின் பயன்களையே அறிந்திருந்த எனக்கு இது புதியதகவல்
இந்த மரப்பிடி செய்யும் முறையே ஒரு தனியான கலை. கோடாலி, பிக்கான், மண்வெட்டி போன்றவற்றுக்கு மரப்பிடி செய்வதற்குச் சரியான ஆள் ‘பூவரசு’. இடியப்ப உரல், மாட்டுவண்டில்களின் சிலைக்கம்புகள், சில்லுக்கட்டைகள் எல்லாமே பூவரசு மரத்தில் இருந்து செய்யப்படுவதே.

மரப்பிடி செய்வதற்கு பூவரசு மரத்திலிருந்து நல்ல பழுத்தக் கொப்பாகப் பார்த்து வெட்டி நெருப்புத் தணலில் போட்டுச் சுடுவார்கள். பொன் நிறத்தில் அது எரிந்து வரும்போது, தோலைக் கீறி அகற்றி, மரவேலை செய்யும் தொழிலாளர்களிடம் கொடுத்து சீவி எடுப்பார்கள். அதை மண்வெட்டி, பிக்கான் கோடாலிக்குப் பிடியாகப் போட்டால் சிங்கன் அசையாமல் இருப்பார்.

- ஜேகே என்னும் Jeyakumaran Chandrasegaram

கூடவே நகைச்சுவை.

அப்படியே Amazon இல் நூலின் Kindle பதிப்பை வேண்டி, முழுவதையும் வாசித்து விடலாம் என்றிருக்கிறேன்.

- சந்திரவதனா
09.09.2018
Last Updated on Friday, 14 September 2018 21:54
 
Die offene Wunde NSU PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by Kerstin Vlcek   
Friday, 14 September 2018 20:55
Schwäbisch Hall / Kerstin Vlcek 11.08.2018

„Ende der Aufklärung – Die offene Wunde NSU“: Haller-Tagblatt-Redakteur Thumilan Selvakumaran ist Mitherausgeber des Buches über den NSU. Viele Fragen sind bis heute offen.

War der Mord an der Polizisten Michèle Kiesewetter in Heilbronn Zufall oder geplant? Besteht der Kern des Nationalsozialistischen Untergrunds (NSU) tatsächlich nur aus Beate Zschäpe, Uwe Mundlos und Uwe Böhnhardt? Warum  hat der Verfassungsschutz so lange nichts vom NSU mitbekommen? Diese und noch viele weitere Fragen werden im Buch „Ende der Aufklärung – Die offene Wunde NSU“ aufgeworfen, auseinandergedröselt und versucht zu klären.

Mitherausgeber Thumilan Selvakumaran, Redakteur des Haller Tagblatts, hat mit weiteren Journalisten und Wissenschaftlern in einem rund 330 Seiten umfassenden Buch versucht, dem Leser die Komplexität des NSU-Gespinstes näherzubringen.

Das haben die 13 Autoren geschafft, auch für einen Laien in der NSU-Thematik. Dass sie lange gegraben und recherchiert haben, ist in jedem der Kapitel herauszulesen. Interviews mit Anwälten, wie jener von der Mutter von Michèle Kiesewetter, und Auszüge aus Plädoyers der Anwälte der NSU-Opfer, geben einen tieferen Einblick in das schwer zu fassende Thema
Last Updated on Tuesday, 16 October 2018 15:57
Read more...
 
More Articles...
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 3 of 71