home loans

Manaosai 3

simplecaddy

Your cart is empty

Who's Online

We have 71 guests online
Literatur


மோகன் ஆர் ட்ஸ் (இராமதாஸ் மோகனதாஸ்) PDF Print E-mail
Literatur - கட்டுரைகள்
Written by வர்ணகுலத்தான்   
Sunday, 06 May 2018 08:05
மோகன் ஆர் ட்ஸ் (இராமதாஸ் மோகனதாஸ்)இழப்புக்களும், இறப்புக்களும் எங்களுக்கு புதியவை அல்ல. ஒவ்வொருமுறையும் அவைகளை சந்திக்கும் பொழுது உடைந்துபோகின்றோம். இருந்து அழுகின்றோம். பின்னர் எம்மைநாமே தேற்றிக்கொள்கின்றோம் எழுந்துநடக்கின்றோம். ஓயாத அலைகளால் தினம்தினம் தாக்கப்படும் வல்வெட்டித்துறையின் கரைகளைப் போலவே அக் கரையில் தோன்றும் மனிதர்களான எங்களிற்கும் இவை பாலபாடங்களே. எனினும் சுனாமியாய் கரையைமேவி ஊருக்குள் புகுந்துதாக்கும் அலைகள் சிலவேளைகளில் எம்மை நிர்க்கதியாக்கி விடுகின்றன. கண்களை கண்ணீரில் மூழ்கடித்து விடுகின்றன. கடல்நீரின் கரிப்பைத் தாங்கும் கண்களினால் சில உறவுகளின் பிரிவினை மட்டும் தாங்க முடிவதில்லை. இவ்வாறாகத்தான் மோகண்ணா என்ற உறவும் எங்களை நிர் கதியாக்கிவிட்டு பிரிந்து சென்றுள்ளது . மற்றவர்களால் பெரும் ஓவியனாகமட்டும் அறியப்பட்ட மோகண்ணா ஒரு வரலாற்றின் சாட்சியானவர் . 1970 ஆண்டு தம்பி என அழைத்து பழகத்தொடங்கிய தலைவர் பிரபாகரனை விடுதலை இயக்கத்தில் சக தோழனாக, தமிழினத்தின் தலைவராக, தான்வணங்கும் தெய்வமாக பலநிலைகளில் உயர்திப்பார்த்த உத்தமர். வல்வெட்டித்துறை ஊறணியில் இருந்து பொலிகண்டி மணிக்கம்பிதோட்டம் வரை சுமார்ஒன்றரை மைல்தூரம் ஒற்றைப் புறாவை துரத்திச் சென்று உறுதியுடன்பிடித்த பிரபாகரனை தனது நெஞ்சில் சுமந்துதிரிந்த பிடிவாதக்காரர் மோகண்ணா ஆவார்.

துரையப்பா கொலைவழக்கில் ‘வேம்படி மோகன்’ என்ற பெயரில் பஸ்தியாம் பிள்ளையால் தீவிரவேட்டைக் குள்ளாகியவர் இராமதாஸ் மோகனதாஸ் ஆவார். 1916இல் அமெரிக்காவின் கலிபோணியாவில் உருவாகிய Goldwin pictures நிறுவனமே பின்னாட்களில் Metro Goldwyn mayer எனும் பிரமாண்டமான Media Company உருவா யிற்று. MGM எனும் இந்நிறுவனத்தின் Trad mark ஆக காணப்படுவது திரைப்படசுருள்களுக்கிடையில் இருந்து கர்ஜிக்கும் சிங்கம் ஆகும். இதனை மூலமாகவைத்து 1976இல் மோகண்ணா உருவாக்கிய தமிழீழ விடுதலை புலிகளின் உத்தியோகபூர்வமான அடையாளச்சின்னமே மதுரை ஓவியர் நடராசாவிற்கு பின்னாட்களில் பொன்னாடை போர்த்தியது எத்தனை பேருக்கு தெரியும்.
Last Updated on Tuesday, 08 May 2018 06:57
Read more...
 
மீனாட்சியம்மாள் நடேசய்யர் - இலங்கையில் சமூக மாற்றத்திற்கான முதலாவது பெண்குரல் PDF Print E-mail
Literatur - கட்டுரைகள்
Written by லெனின் மதிவானம்   
Monday, 30 April 2018 06:06
இலங்கையில் சமூக மாற்றத்திற்கான முதலாவது பெண்குரல்திருமதி. மீனாட்சியம்மாள் நடேசய்யர் மறைந்து சுமார் எழுபத்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இந்த கால இடைவெளியில் மலையக சமூகத்திலும் இலங்கையிலும் உலகிலும் எண்ணரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தற்போது என்றும் இல்லாதவாறு வரலாற்று ஆய்வும் விஞ்ஞானபூர்வமான பார்வைகளும் பல்வேறு விதங்களில் வளர்ந்துள்ளன. ஆயினும் இலங்கை சமூக அரசியலில் - இலக்கிய வரலாற்றில் விரல்விட்டு எண்ணக்கூடிய, இலங்கையில் சமூக மாற்றத்தின் முதல் பெண்குரலாக விளங்கும் மீனாட்சியம்மாள் குறித்த ஆய்வுகளும் தொகுப்புகளும் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. 

காலத்தின் பின்னணியில் அம்மையாரை ஆராயவும் மதிப்பிடவும் அம்மையாரின் பங்களிப்பைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்கும் முதலில் அவரது ஆக்கங்கள் யாவும் முறையாக தொகுக்கப்படல் வேண்டும். அது இலகுவான காரியமன்று. மலையகம் தொடர்பிலான ஆவணக் காப்பகம் ஒன்று இல்லாத நிலையில் வெறும் சுவடிகள் திணைக்களத்தை மாத்திரமே நம்பியிருக்க வேண்டியதாகின்றது. இத்திணைக்களத்தில் மிகப் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்ற ஆவணங்களை பரிசிலிப்பதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகள் மற்றும் சில ஆவணங்கள் இல்லாதிருப்பதில் ஏற்படக் கூடிய தவறுகள் அனைத்தும் இந்தச் சேகரிப்பு முயற்சியில் தாக்கம் செலுத்தக் கூடிய காரணிகளாக அமைந்திருக்கின்றன. இந்நிலையில் மீனாட்சியம்மாளின் எழுத்துக்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை. அதுவரை நாம் காத்திருக்கவும் முடியாது. எனவே இருப்பவற்றை வைத்துக் கொண்டு இவ்வாய்வுகளை செய்ய வேண்டியுள்ளது. மேலும் தகவல்கள் கிடைக்குமாயின் அவற்றை அடுத்து வரும் ஆய்வுகளில் சேர்த்துக் கொள்ள வேண்டியே உள்ளது. எல்லாவற்றையும் தொகுத்த பின்னர்தான் இது பற்றிய ஆய்வுகளையே தொடர வேண்டும் எனச் சட்டம் போடுவது, இருப்பதையும் இல்லாதாக்குகின்ற முயற்சியாகவே படுகின்றது. அவ்வாறே திரும்பத் திரும்ப ஒன்றையே செய்யும் முயற்சியாகவும் அவ்வாய்வுகள் அமைந்து விடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.
Last Updated on Friday, 14 September 2018 22:06
Read more...
 
சில பேரின் சில பக்கங்கள் PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by சந்திரவதனா   
Monday, 04 December 2017 10:17
கதை எழுத முயலும் போதெல்லாம் நான் என் சுயத்தை இழந்து கொண்டிருக்கிறேன். கதை எழுத எனக்கு வராது என்று சொன்னால் அவன் கேட்கிறானே இல்லை. எழுது எழுது என்று என்னை ஆய்க்கினைப் படுத்திக் கொண்டே இருக்கிறான். ஒரு பொழுதில் மின்னஞ்சலிலும், இன்னொரு பொழுதில் தொலைபேசியிலும் என்று தொல்லைப் படுத்துகிறான்.

„ஒரு ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டுக் கொண்டிருந்தாள்“ என்று தொடங்கினேன். அவன் மிகக் கோபமாக „உந்தக் கதையை எத்தனை காலத்துக்குத்தான் கேட்டுக் கொண்டிருப்பது?“ என்று கத்தினான்.

எழுதத் தொடங்கியதைக் கிழித்துப் போட்டு விட்டு, இல்லையில்லை அது அந்தக் காலம். எழுதத் தொடங்கியதை அப்படியே விட்டு விட்டு இன்னொரு பக்கத்தைத் திறந்தேன். எனது கோப்புக்குள் இப்போது பாட்டி வடை சுட்டதும், நரி திராட்சைப்பழம் சாப்பிட்டதும், குரங்கு அப்பம் பிய்த்துத் தின்றதும்... என்று குறை குறையாகப் பல துண்டுகள். அவைகளை எறியவும் மனமில்லை. தொடரவும் தெரியவில்லை.

புதிய பக்கம் ஒன்றைத் திறந்தேன். மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது. நான் எழுதத் தொடங்கினேன்.
Last Updated on Wednesday, 21 February 2018 09:20
Read more...
 
மடியில் ஒளிந்திருக்கும் துளி விசம் PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by ஆழ்வாப்பிள்ளை   
Sunday, 03 December 2017 10:16
இதை ஒரு கோழைத்தனமான தற்கொலை என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு குற்றவாளி நீதிமன்றம் தனக்கு வழங்கிய தண்டனையை ஏற்க மறுத்துரைப்பது இயல்பு. ஆனால் நீதிமன்றத்திலேயே தண்டனையை மறுதலித்து தற்கொலை செய்து கொள்வது என்பது நான் அறிந்த வரையில் புதிது.

கடந்த புதன் கிழமை (29.11.2017) நெதர்லாந்தின் Haag நகரில் உள்ள முன்னாள் யுகோஸ்லாவியாவுக்கான சர்வதே குற்றவியல் நடுவர்மன்ற விசாரணையின் போது பொஸ்னியா நாட்டின் முன்னைய இராணுவத் தளபதி ஸ்லோபோடன் பிரல்ஜக் (Slobodan Praljak,† 72) விசமருந்தியதைத்தான் இங்கே நான் குறிப்பிடுகிறேன்.

திட்டமிட்ட கொலை, மனித நேயமற்ற நடத்தை, பாலியல் தாக்குதல், பொதுமக்களை சட்டவிரோதமாக நாடு கடத்துதல், பொதுமக்களை சட்டவிரோதமான முறையில் கைது செய்தல், சட்டவிரோத சிகிச்சை அளித்தல், பொது மக்களின் சொத்துக்களை அழித்தல்… போன்ற கடுமையான போர்க்குற்றங்களுக்காக 20 வருட தண்டனையை, Praljak க்கு எதிராக நீதிபதி வழங்கிய போது, "நான் ஒரு போர் குற்றவாளி அல்ல. நான் உங்கள் தீர்ப்பை நிராகரிக்கிறேன். "என்று சத்தமாக அறிவித்து விட்டு டிவி கமராக்கள் படம் பிடித்துக் கொண்டிருக்கும் போதே தன்னிடம் இருந்த நஞ்சை அருந்தினார். நடப்பது என்ன என்று அறியாமல் நீதிபதி பிற குற்றவாளிகளுக்கு எதிரான தீர்ப்பை வாசிக்க முற்படும் போது, Praljak க்கின் வழக்கறிஞர் தனது வாடிக்கையாளர் விஷத்தை விழுங்கி விட்டதாக அறிவித்ததுடன் நீதிமன்றத்தில் பரபரப்பு ஆரம்பமானது. அதன்பிறகு மன்றில் நடப்பதை ஒளிப்பதிவு செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்க வேண்டும். அம்புலன்ஸ் வந்ததை தொலைக்காட்சியில் காட்டினார்கள். பின்னர் Praljak மருத்துவமனையில் இறந்து போனதாக அறிவிப்பு வந்தது.
Last Updated on Monday, 26 February 2018 11:12
Read more...
 
மடியில் ஒளிந்திருக்கும் துளி விசம் PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by ஆழ்வாப்பிள்ளை   
Sunday, 03 December 2017 10:03
 
இலவசமாக கொஞ்சம் ஹைட்ரஜன் சல்பைட் தரவா? PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by ஆழ்வாப்பிள்ளை   
Saturday, 25 November 2017 10:56
கெமிரிக் எனது வேலையிடத்து நண்பன். ஒருநாள் திடீரென எழுந்து நின்று தனது வலது கை மோதிர விரலை நீட்டி “இழு” என்று கண்களால் சாடை காட்டினான். விரல்களில் வலி ஏற்பட்டால் விரலை இழுத்து நெட்டி முறிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. ஒருவேளை கெமிரிக்குக்கு விரலில் வலி ஏதாவது ஏற்பட்டிருக்கலாம் என்ற எண்ணத்தில் அவனது விரலைப் பிடித்து இழுத்தேன். அவ்வளவுதான் அவன் பின் பக்கம் இருந்து “புர்..புர்..” என்ற சத்தம் வரத் தொடங்கியது. நான் திகைத்துப் போனேன். சொர்க்கம் பக்கத்தில் வந்தது போல் கண்ணை மூடி கெமிரிக் சுகம் கண்டு கொண்டிருந்தான். சத்தம் அடங்கியபின் கண்களைத் திறந்து, “வயித்திலை நீண்ட நேரமா ஒரு அழுத்தம் இருந்தது. இப்போ அது சரியா போச்சுது. நன்றி” என்றான். இது கெமிரிக்கின் ஒரு விளையாட்டு என்பதை பின்னர் மற்றவர்களிடம் இருந்து அறிந்து கொண்டேன். திடீர் திடீரென எழுந்து நின்று “யாராவது விரல்களை இழுத்து விடுங்கள்” என்பான். நாங்கள் மறுத்து விட்டால் தானே தனது விரலை இழுத்து பயம் காட்டுவான். அவனது இந்தச் செயல் பழகிப் போனதால் இப்பொழுது எங்களில் யாருமே அவனது மோதிர விரலை மறந்தும் தொட்டுப் பார்ப்பதில்லை. ஆனாலும் “புர் புர்... “ சத்தம் அவனிடம் இருந்து வந்துகொண்டுதான் இருந்தது.

இன்னும் ஒரு நாள் வேலையிடத்தில் மதியம் சாப்பிட்டு விட்டு லிப்றில் ஐந்தாம் மாடியில் இருந்து வந்து கொண்டிருந்தோம். நான்காம் மாடியில் ஒரு ஆணும், நான்கு பெண்களும் லிப்றில் பயணிக்க நின்றிருந்தார்கள். “போதுமான இடம் இல்லை. கொஞ்சம் காத்திருங்கள். லிப்ற் திரும்ப வரும்” என்று கெமிரிக் அவர்களிடம் பணபாகச் சொன்னான். கெமிரிக் சொன்னது அங்கே நின்று கொண்டிருந்த ஆணுக்குப் பிடிக்கவில்லை. அந்த ஆண் லிப்றுக்குள்ளே எட்டிப் பார்த்துவிட்டு, “16 பேர்கள் பயணிக்கலாம் என்று போட்டிருக்கு. உள்ளே ஒன்பது பேர்கள் தானே நிற்கிறீர்கள்” என்று சொல்லிவிட்டு நான்கு பெண்களுடன் உள்ளே நுளைந்து விட்டான். லிப்ற் தாங்கும் எடையை வைத்தே எத்தனை பேர்கள் பயணிக்கலாம் என்று குறிப்பிட்டிருப்பாரகள். ஆனால் உண்மையில் அத்தனை பேரும் ஒருங்கே நின்று பயணிப்பது என்பது சிரமமான சூழ்நிலையாகவே இருக்கும்.
Last Updated on Sunday, 06 May 2018 08:01
Read more...
 
More Articles...
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 6 of 71