தொலைநோக்கி - (நா.யோகேந்திரநாதன்) Print
Literatur - புத்தகங்கள்
Written by Chandra   
Friday, 07 August 2009 05:05
நா.யோகேந்திரநாதனின் "தொலைநோக்கி" நூல் வெளியீடு

புலிகளின்குரல் வெளியீட்டுப் பிரிவின் வெளியீடான நா.யோகேந்திரநாதனின் "தொலைநோக்கி" நூல் 8.10.2006 அன்று வெளியிடப் பட்டது. புலிகளின் குரல் நடுவப் பணியகத்தில் 8.10.2006 அன்று ஞாயிற்றுக் கிழமை மாலை 3 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வுக்கு புலிகளின்குரல் பிரதம செய்தி ஆசிரியர் தி.தவபாலன் தலைமை தாங்கினார். பொதுச்சுடரினை தமிழீழ மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் பொன்.தியாகம் ஏற்றினார். தமிழீழத் தேசியக் கொடியினை தமிழீழ கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் கவிஞர் புதுவை இரத்தினதுரை ஏற்றினார். மாவீரர் உருவப்படத்திற்கான பொதுச்சுடரினை இரண்டாம் லெப். நீதிவளவனின் தந்தையார் வளவை வளவன் ஏற்றினார். தமிழீழ அரசியல்த்துறை துணைப் பொறுப்பாளர் சோ.தங்கன் மலர்மாலை அணிவித்தார். புலிகளின்குரலின் நிகழ்ச்சிப் படைப்பாளர் ஆதிலட்சுமி சிவகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் விடுதலைப்புலிகள் பத்திரிகை முதன்மை ஆசிரியர் ரவி ஆற்றிய சிறப்புரை:

சிறிலங்கா இராணுவத்தினர் பாரிய அளவிலான படை அச்சுறுத்தலை வழங்கினாலும், அதனை எந்த வகையிலும் எதிர்கொள்ளமுடியும்.

உலகத்திலே பல்வேறு வகையான நெருக்கடிகளை எதிர்கொண்டு விடுதலை பெற்ற பல நாடுகள் உள்ளன என்று கூறிய ரவி, வியட்நாம் போரில் அந்நாட்டு மக்கள் எதிர்கொண்ட அவலங்களையும் அதிலிருந்து அவர்கள் மீண்டு வெற்றி பெற்றதையும் சுட்டிக்காட்டினார்.

எந்த வகையிலான நெருக்கடிகளையும் மக்களின் தளராத உறுதி மூலம்தான் வெற்றிகொள்ளலாம். நாம் எமது விடுதலைப் போராட்ட வரலாற்றிலே அவ்வாறான எத்தனையோ நெருக்கடிகளை எதிர்கொண்டு வெற்றி பெற்று வரலாற்றிலும் பதிவு பெற்றுள்ளோம்.

தற்போது ஏற்பட்டுள்ள அசாதராண சூழலில் எதிரியை எதிர்கொள்ள நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து எமது பலத்தை வெளிப்படுத்தி நாங்கள் எங்கள் விடுதலையை வென்றெடுக்க முடியும் என்றார் ரவி.

புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன் நூல் வெளியீட்டு உரையினை நிகழ்த்தினார்.

அரசியல்துறைத் துணைப் பொறுப்பாளர் சோ.தங்கன் முதல் படியை வெளியிட தமிழ் ஊடக அறிவியற் கல்லூரிப் பணிப்பாளர் இராதேயன் அதனைப் பெற்றுக்கொண்டார்.

"தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் கரத்தினைப் பலப்படுத்தும் வகையில் நா.யோகேந்திரநாதனின் படைப்புக்கள் அமைகின்றன" என்று சோ.தங்கன் தனது உரையில் குறிப்பிட்டார்.

அதன் பின்னர் நூலாசிரியர் மதிப்பளிப்பு இடம்பெற்றது. நா.யோகேந்திரநாதனுக்கு கவிஞர் புதுவை இரத்தினதுரை பொன்னாடை போர்த்தி மதிப்பளித்தார்.

கொள்கை முன்னெடுப்புப் பிரிவுப் பொறுப்பாளர் இளங்கோ, சமாதான செயலகப் பணிப்பாளர் சி.புலித்தேவன், தமிழர் புனர்வாழ்வுக் கழக ஊடகப்பிரிவைச் சேர்ந்த சங்கீதன் ஆகியோர் சிறப்புப் பிரதிகளை வழங்கி மதிப்பளித்தனர்.

அனைத்துலக தொடர்பகப் போராளி சோமாஸ்கந்தன், மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் பொன்.தியாகம், கலை பண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் கவிஞர் புதுவை இரத்தினதுரை ஆகியோர் வாழ்த்துரைகளை நிகழ்த்தினர்.
Last Updated on Tuesday, 11 March 2014 20:20