பிரசுரகளம் - 5

பிரசுரகளத்தின் இவ்விதழ் ஊடகவியல்துறையில் ஈடுபாடுள்ளவர்களுக்கு, அத்துறையில் அண்மைக்காலத்தில் வெளியிடப்பட்ட எட்டு நூல்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் வெளிவருகின்றது. இவை அனைத்தையும் எழுதியவர் அருட்திரு ரூபன் மரியாம்பிள்ளை. சில்லாலையைப் பிறப்பிடமாகக்கொண்ட அருள் திரு ரூபன் மரியாம்பிள்ளை 1959 ஜுன் மாதம் 24ம் திகதி பிறந்தவர். சில்லாலை ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் 1965இல் தன் ஆரம்பக்கல்வியையும், பின்னர் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் 1972இல் தன் உயர் கல்வியையும் பெற்றவர். கண்டி மாவட்டத்தின் அம்பிட்டிய தேசிய இறையியல் கல்லூரியி;ல் 1982இலும், புனித பிரான்சிஸ் குருத்துவக் கல்லூரியில் 1984இலும் தன் இறையியல் கல்வியை மேற்கொண்டவர். 1986முதல் யாழ். மறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கத்தோலிக்கக் குருவானவராக பணியாற்றுபவர். பிரசுரகளத்தின் இவ்விதழ் ஊடகவியல்துறையில் ஈடுபாடுள்ளவர்களுக்கு, அத்துறையில் அண்மைக்காலத்தில் வெளியிடப்பட்ட எட்டு நூல்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் வெளிவருகின்றது. more

Related Articles