அலையும் மனமும் வதியும் புலமும் - மின்னூல்

இவை புலம்பெயர் தேசத்துக் கதைகள் - இருப்பை இடம் பெயர்த்து இன்னொரு புலத்துக்கு மாற்றி விட்டு விருப்போடு அமர முடியாது வாடியிருந்த பொழுதுகளையும், மொழி, கலாச்சாரம், பண்பாடு, காலநிலை… என்று எல்லாவற்றிலும் வேறுபட்ட புலம் பெயர் தேசத்தில் வசப்பட்ட வாழ்வையும் கூறும் கதைகள்!

அப்போதெல்லாம் குளிர் மூக்கு நுனியில் கொடுவாளாய் குந்தியிருக்கும். நாக்கு உறைப்புக்கும், புளிப்புக்குமாய் அந்தரிக்கும். கனவுகளிலும், நினைவுகளிலும் அம்மாவும், அப்பாவும், சகோதரர்களும் நடமாடிக் கொண்டேயிருப்பார்கள். ஊர் வீடும், வீதிகளும் மூளையின் ஏதோ ஒரு பகுதியில் வளைந்து, நெளிந்து கொண்டிருக்கும். இரவுகளின் விழிப்புகளில் தவிர்க்க முடியாததாய் துயர் படிந்து இருக்கும். ஜேர்மனியின் எங்காவது ஒரு பகுதியில் யாரோ ஒரு வெளிநாட்டவரின் வீடு நாசிகளால் எரிக்கப் பட்டு விட்டது என்ற செய்தியோ அன்றி ஒரு வெளிநாட்டவர் நாசிகளால் நையப்புடைக்கப் பட்டு விட்டார் என்ற செய்தியோ இடையிடையே வந்து கிலி கொள்ள வைக்கும். பாதி இரவில் விழித்திருந்து ஊரில் வாழும் உறவுகளுக்காய் அழுவது அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும். இது எனது மூன்றாவது மின்னூல்.

Free Tamil Ebooks மூலம் வெளியிட்டுள்ளேன்.

மின்னூலை Epup, Mobi, Pdf A4, Pdf 6 Inch. Html ஆகிய வடிவங்களில் படிக்க - http://freetamilebooks.com/ebooks/alaiyum-manamum-vathiyum-pulamum/

பிற வடிவங்களில் படிக்க - https://archive.org/details/pulam


CommentsDiese E-Mail-Adresse ist vor Spambots geschützt! Zur Anzeige muss JavaScript eingeschaltet sein!
அன்புடையீர்,
தங்களது 'அலையும் மனமும் வதியும் புலமும்' நேற்று பதிவிறக்கம் செய்து ஒரே மூச்சில் படித்து உடனே இதை எழுதுகிறேன்.
புலம் பெயர்ந்த மக்களின் தினசரி பிரச்சனைகளையும், மன ஆழத்து ஆசைகளையும் மிக அழகாகவும், துல்லியமாகவும் தங்களது எழுத்துகளில் கொண்டு வந்துள்ளீர்கள்.
நன்றி. வாழ்த்துகள்.
Diese E-Mail-Adresse ist vor Spambots geschützt! Zur Anzeige muss JavaScript eingeschaltet sein!
21.04.2016
Selvi Sathananthan
Is it a new book of yours? Like to read Could u send me a copy to 2 Jarvis Street Erindale South Australia 5066 Selvi acca
April 21 at 4:40am
Chandravathanaa Selvakumaran
செல்வி அக்கா, நான் இதை மின்னூலாகத்தான் உருவாக்கினேன். அச்சுப்பதிப்புச் செய்யவில்லை. உங்களிடம் Kindle இல் அல்லது வேறு வடிவில் வாசிக்கக் கூடிய வசதி இருந்தால் எழுதுங்கள். மின்னஞ்சலில் அனுப்புகிறேன்.
April 21 at 8:45am
Thuvaraga Supramaniam
வடமராச்சி,வீரம் நிறைந்த மண்.
கலாச்சாரத்தையும்,பண்பாட்டையும் இறுக கட்டிஅனைத்து போராடியமண்.
April 20 at 12:19pm
Bala Devakathan
என் வாசிப்புக்கு மிக இனிமையாக இருந்தது பிரதி. தங்குதடையற்ற நடை. இந்த எழுத்து முறை மிக்க பிரமாதமாக வந்திருக்கிறது உங்களுக்கு. பாராட்டுக்கள்.
இதன் மூலம் நீங்கள் மேலான படைப்புக்களை தர முடியும். இந்த பத்து சம்பவங்களும் நினைவு பகிர்வாக மட்டும் இருந்துவிட்டது கொஞ்சம் வேதனை. இவற்றுள் நீண்ட கதைகளாக விரியக்கூடிய கூறுகள் உள்ளன. இவைபற்றி நீங்கள் கவனமெடுக்கவேண்டுமென நான் விரும்புகிறேன்.
'ஒரு அசாதாரண நாள்' ஒரு சிறுகதையாய் நிறைந்திருந்தது. உங்கள் பணி தொடரவேண்டும்.
Diese E-Mail-Adresse ist vor Spambots geschützt! Zur Anzeige muss JavaScript eingeschaltet sein!
30.05.2016
Hari Babu
தங்கள் புத்தகம், புலம் மிகச் சரியான சூழ்நிலைகள் உள்ளடங்கிய கதை. இன்னும் நெறைய சொல்லியிருந்தால் நன்றாக இருக்குமே போன்ற எண்ணம் இருந்தது. முக்கியமாக உங்கள் தோழிக்காக நீங்கள் எதிர்பார்த்து, பிறகு புஸ் என்று போனதுஇ கரப்பான் பூச்சிஇ எல்லாத் தமிழ் வீட்டிலேயும் இருக்கும் என்பது ரொம்ப யதார்த்தம். நன்றி!

Hari Babu
13. Oktober 2017 um 17:40

Related Articles