அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் - இந்திரன்Amazon Kindle பதிப்பைப் படிக்க முடிந்தது.

முகப்புத்தகம்தான் அப்படியொரு நூலை எனக்கு அறிமுகப்படுத்தியது. கறுப்பு இனத்தவரின் துயரத்தைக் கூறும் கதைகளும், கவிதைகளும் மனதை நெருடுகின்றன.

xxxxxx xxxxxx xxxxxx

சிரிக்கக் கற்றுக் கொடு, மகனே!

முன்னொருகாலத்தில்
மகனே, அவர்கள் இதயத்தோடு சிரிப்பார்கள்.
கண்களால் சிரிப்பார்கள்,
ஆனால் இப்போது
பற்களால் மட்டுமே சிரிக்கிறார்கள்.

அவர்களது பனிக்கட்டி மூடிய
சில்லிட்ட கண்கள்
என் நிழல்களுக்குப் பின்னாலும்
துழாவுகின்றன.
அவர்கள் தங்கள் இதயங்களோடு
கை குலுக்கிய காலங்கள்
இருக்கத்தான் செய்தன.

என் மகனே, குழந்தாய்
இப்போது அவர்களின் வலது கை இதயமில்லாமல் குலுக்கிறபோது
இடது கை என் கால் சட்டைப்பைகளை
துழாவுகின்றன…..

- கேபிரியேல் ஒகாரா / நைஜீரியா /


xxxxxx xxxxxx xxxxxx

13 எழுத்தாளர்களின் படைப்புகளை இந்திரன் ராஜேந்திரன் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். நல்ல பணி. வேற்று இலக்கியங்களையும், அவர்தாம் வாழ்க்கை முறைகளையும் அறிந்து கொள்ள ஏதுவானது. ஆங்காங்கு குறிப்பிடத்தக்க நிறைய எழுத்துப் பிழைகளும் உள்ளன.

இப்பதிப்பில் முகநூலில் குறிப்பிடப்பட்டுள்ள மாயா ஏஞ்சலோவா/ அமெரிக்கா எழுதிய `இருப்பினும் நான் எழுவேன்´ என்ற கவிதையை வாசித்ததாக எனக்கு ஞாபகம் இல்லை.

xxxxxx xxxxxx xxxxxx

நீங்கள்
வரலாற்றில் என்னைத் தாழ்த்தி எழுதலாம்
உங்களது
கசப்பான, கோணலான பொய்களால்.
என்னை அழுக்கில் போட்டு மிதிக்கலாம்
இருப்பினும் தூசியைப் போல
நான் எழுவேன்.

எனது புழங்கும் அறைக்குள்
எண்ணெய்க் கிணறுகள்
இறைத்துக் கொண்டிருப்பது போல நான் நடப்பதால்…
- மாயா ஏஞ்சலோவா /அமெரிக்கா

இப்பதிப்பில் இது இடம்பெறவில்லையோ?

xxxxxx xxxxxx xxxxxx

நீக்ரோவியம் இருபதாம் நூற்றாண்டின் மனிதநேயம் “நீக்ரோவியம்" என்பது நிற வேறுபாடும் அல்ல, தன் மறுப்பும் அல்ல. அதே நேரத்தில், அது வெறுமனே ஒப்புக்கொள்ளலும் அல்ல. அது தனக்குள்ளாகவே தன்னை வேறூன்றிக் கொள்வதாகும். தனது இருப்பை தானே உறுதிப்படுத்திக் கொள்ளுதல் ஆகும்.

நீக்ரோவியம் என்பது, சில ஆங்கிலம் பேசும் ஆப்பிரிக்கர்கள் ஆப்பிரிக்க உருவம் என்று அழைப்பதைக் காட்டிலும் கூடவோ குறைந்ததோ அல்ல.

மேற்கு இந்தியக் கவிஞரான எய்மீ சீசர்நீக்ரோவியம் எனும் சொல்லை உண்டாக்கிய காலத்திலிருந்து அதன் பொருளைத் தெளிவாக விளக்க முயன்று வந்துள்ளோம். அதை ஒரு விடுதலைக்கான ஆயுதமாக மாற்றி வந்துள்ளோம். அதை இருபதாம் நூற்றாண்டின் மனித குலத்திற்கு ஒரு பரிசாக அளிக்கிறோம்.

ஆனால் மீண்டும் வினவுகிறேன், நீக்ரோவியம் என்பதுதான் என்ன?...
- லியோபோல்டு சிடார் செங்கோர் / செனிகால்

புத்தகத்தைப் படிக்க விரும்பினால் அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்

- சந்திரவதனா
06.09.2018

Related Articles