ஊருக்குப் போக விருப்பமில்லை - "இந்தியத்தால் சிந்திய இரத்தம்"

சின்னஞ்சிறு பாலகனாய்... முற்றும் அறியாத பிஞ்சாய் நான்
நஞ்சு தரித்த எம் வீரரை... நட்புடனே பார்த்து நின்றேன்!
கிழமைகளில் சில நாளில் இனிமையாய் அவர்களுடன்,
எங்கள் வீட்டில் உணவுண்டு நன்றி சொல்லிச் செல்லும் வீரர்...<
மறுமுறை வரும்போது ஒருவரேனும் குறைவார்... தேடுவேன்!!

"மொறிஸ்" என்று சொன்னால் ஊருக்கே தெரியும்!
அப்போது இந்தியனுக்கும் நன்றாய்த் தெரியும்!
வல்லரசுக் கனவான்களின் கனவுகளுக்கு
அவன் விட்ட வேட்டுக்கள்தான் வேட்டுவைத்தன!
ஒரு வீரனின் பெயரைக்கேட்டே அஞ்சியது இந்தியம்!

தலைவன் வழியில் நின்றவன்... தமிழருக்கு காவலன்!<
இந்தப் பாலகன் கவிதைக்கும் அவன்தான் நாயகன்!
அவன் கருங்குழல் ஆயுதந்தனை வாங்கி...
முதன்முறையாய் சுமந்து பார்த்தான் !
ஆறு வயதிலும் அவனுக்கு ஆசை வந்தது!

ஈழத்தில் தமிழ் இரத்தம் குடித்த இந்திய வல்லூறுகள்-இவன்
காலத்தில் இரைதேட வெளியே வரப்பயந்து
பச்சைக் கோட்டைக்குள் பதுங்கியே கிடந்தனர்!
நேரெதிர் இயலாமல்... வீரனை விழுத்த
சூழ்ச்சிகள் தேடினர் சூழ்ச்சிக்கார சூரர்கள்!!

பல தடவை முயன்று தோற்றுப்போனவர்களோடு
தமிழினத்தின் சாபக்கேடாம்... துரோகமும் கூட்டுச்சேர்ந்தது!
துரோகம் காட்டிக்கொடுக்க... சுற்றிவளைத்த சூழ்ச்சி வலையில்
பலநூறு துப்பாக்கி முனைகள் அவனை குறிபார்த்து நின்றன!
அஞ்சா நெஞ்சன் அவன்...! நேரெதிர் நின்றான் அஞ்சாமல்!

துப்பாக்கிக் குண்டுகள் தடுமாறின... அவனைத் தொட முடியாமல்!
வீழ்த்தியே ஆகவேண்டும் என்ற வீணர்களின் வெறியாட்டத்தில்
ஒரு நிகரற்ற வீரன்... தன்னிரு தோழரோடு... தாய்மண்ணில் சாய்ந்தான்!
அவர்கள் வீழ்ந்தும் அடங்காத கொலைவெறியில்....
அதை நினைத்தால் கலங்குது... கண்கள் இன்னும்! பதைக்குது நெஞ்சம்!

நான் பார்த்துப் பழகிய ஒரு மாவீரனின் வீரமரணம்..
இன்னும் அழியாத நினைவாய் எனக்குள்...
அறியாத வயசிலும் என் மனதில்... விதையாய் விழுந்தான்!
அவன் வரமாட்டான் என்று தெரிந்தும்...
அவனையே தேடிக்கொண்டிருந்தது... அந்த பிஞ்சு மனசு

அவன் கண்ட கனவு... அவனின் தாகம்,இலட்சியம் ஒரு நாளும் தோற்காது...!
விடிகின்ற ஈழத்தில் ....மீண்டும் பிறந்து தாய்மண்ணில் தவழ்வார்கள் வீரக்குழந்தைகள்!

சிந்திய இரத்தத்தின் வரலாறுகள் தொடரும்...
Quelle - Yarl.com


Drucken   E-Mail

Related Articles